இறக்குமதி வரி குறைப்பு

rice
rice

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு வாழ்க்கைச் செலவு குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காய்ந்த மிளகாய், கோழி இறைச்சி, முட்டை, மீன், அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது,

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய் ஒரு கிலோவிற்கான வரி 25 ரூபாவில் இருந்து 5 ரூபா குறைத்து 20 ரூபாவாக அறவிட வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் மீன் ஒரு கிலோவிற்கான வரி 100 ரூபாவிலிருந்து 25 ரூபா குறைத்து 75 ரூபாவாக அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கும் வாழ்க்கைச் செலவுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரச களஞ்சியசாலைகளில் இருந்து 48 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை சிறிய மற்றும் மத்திய தர அரிச ஆலை உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுத்து, அரிசியாக்கி, சத்தோச ஊடாக நாட்டரிசி ஒரு கிலோ 80 ரூபாயக்கும் சம்பா கிலோ 85 ரூபாயக்கும் விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வாழ்க்கைச் செலவு குழுவின் தலைவர் அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.