முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் காயம்

1597599191 accident 2
1597599191 accident 2

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் (16) இரவு 9.00 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியூடாக மாவட்ட செயலக பக்கம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியுடன் கண்டி வீதியூடாக வைத்தியசாலை வீதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்ட சந்தியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் சாரதி விதி வீதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை எனவும் முச்சக்கரவண்டியின் சாரதி வேகமாக வாகனத்தினை செலுத்தியமையினாலும் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.