சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானம்!

download 36
download 36

கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் தமக்கு உரிய கௌரவத்தை வழங்கவில்லை என்ற அதிருப்தியில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்கும் பௌத்த பிக்குமார்களே மேற்படி யோசனையை முன்வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுயாதீனமாக செயற்படுவது தொடர்பான யோசனை அடுத்தவாரம் கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பரிந்துரை நிராகரிக்கப்பட்டமை, அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை போன்ற பல குழப்பங்களுக்கு சுதந்திரக் கட்சி முகங்கொடுத்துள்ள நிலையிலேயே இந்த யோசனையும் தற்சமயம் முன்வைக்கப்பட்டிக்கிறது.