மதுபான போத்தல்களை மீள் சுழற்சி செய்வதற்கு புதிய வேலைத்திட்டம்!

1200px Recycle001.svg
1200px Recycle001.svg

பாவனையின் பின்னர் வெளியேற்றப்படும் மதுபான போத்தல்களை மீள் சுழற்சி செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த இருப்பதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய சுற்றுசூழல் அதிகார சபையுடன் இணைந்தே கலால் திணைக்களம் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. பயன்படுத்தியபின்னர் வெளியேற்றப்படும் மதுபான போத்தல் மற்றும் டின்களினால் சூழல் மாசடைவதாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் பிரகாரமே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பயன்படுத்தியபின்னர் வெளியேற்றப்படும் மதுபான போத்தல்களையும் , டின்களையும் மீள் சுழற்சியின் மூலம் மீண்டும் பாவனைக்கு எடுத்துக்கொள்வதுடன் , இதனால் தேசிய வர்த்தகர்களுக்கும் , உற்பத்தியாளர்களுக்கும் பெரும் பயன்கிடைக்கப் பெறும் என்றும் கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வருடத்திற்கு ஒருதடவை பயன்படுத்தப்பட்ட 300 மில்லியன் மதுபான போத்தல்களும், 160 மில்லியன் டின்களும் முறையாக அகற்றப்படுவதில்லை என்று மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.