இந்த நாட்டில் தேசிய இன மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது ;அடைக்கலநாதன்

SELVAM 1 720x380 1
SELVAM 1 720x380 1

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினை தந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து இவ்வாறு கூறினார்.

பௌத்த மதத்திற்கும், புத்த சாசனத்திற்கும், சிங்கள மக்களுக்கும் கூடுதலான சலுகைகளை அவர் பேசியது போன்று தங்களுக்கு தென்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

19வது திருத்த சட்டத்தினை ஒழிக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார், அந்த வகையிலே ஒட்டுமொத்தமாக ஜனாதிபதியினுடைய சிந்தனையை வைத்து பார்க்கின்ற போது, இந்த நாட்டிலே வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையக மக்களினுடைய வாழ்க்கை என்பது கேள்விக்குறியான ஒரு விடயமாகத்தான் அமையப்போகின்றது என்பது இதிலிருந்து தெரிகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.