இதுவரை இருந்த நடைமுறையை மாற்றிய அரசு ; கவலையி்ல் மனோ

625.500.560.350.160.300.053.800.900.160.90 25
625.500.560.350.160.300.053.800.900.160.90 25

நாடாளுமன்ற விவாதங்களில் எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் நேரம் தொடர்பாக இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த சம்பிரதாயத்தை அரசாங்கம் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட இந்த நிலைமை மிகவும் வருத்தத்திற்கு உரியது எனவும் எதிர்க்கட்சியே நாடாளுமன்றத்தில் விவாதங்களை கோரும். இதுவே உலகம் முழுவதும் உள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காணப்படும் அடையாளம் மற்றும் நடைமுறையாகும். அந்த நடைமுறை இன்று மீறப்பட்டுள்ளது.

தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறி முதலாவது கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே அதிக நேரத்தை ஒதுக்கிக் கொண்டனர்.

கடந்த முறை எமக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. நாங்கள் 60 வீத நேரத்தை எதிர்க்கட்சிக்கு வழங்கினோம். 40 வீதத்தை நாங்கள் பெற்றுக்கொண்டோம். அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்களுக்கு எதிர்க்கட்சியே விவாதங்களை கோரும்.

உலகம் முழுவதும் இதுவே நடைமுறையில் உள்ளது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.