கடமை நேரத்தில் உயிரிழக்கும் ஊழியர்களின் நட்டஈடு அதிகரிப்பு

India 1024x676 1
India 1024x676 1

கடமை நேரத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு தற்பொது வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நட்டஈட்டு தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் திணைக்களத்தில் இடம்பெற்ற தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் உயிரிழந்தால் அந்த குடும்பம் முழுமையாக நிர்க்கதியற்று இருக்கும் சந்தர்ப்பதில் 5 இலட்சம் ரூபா நட்டஈடு எந்த விதத்திலும் போதுமானதாக இருக்காது எனவும் தற்போது வரையில் நிலுவையில் உள்ள தொழிலாளர் நட்டஈட்டு வழக்குகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.