சாகல ரத்நாயக்கவிடம் சுமார் 10 மணி நேர நீண்ட வாக்கு மூலம் பதிவு!

ரத்நாயக்க
ரத்நாயக்க

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஷ இன்று ஆஜரான, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் சுமார் 10 மணி நேர நீண்ட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றையதினம் குறித்த ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பட்டிருந்தது. 

எனினும் தன்னால் இன்றைய தினம் ஆஜராக முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆணைக் குழுவுக்கு அறிவித்து, தனக்கு இம்மாதம் 31 ஆம் திகதி ஆஜராக திகதி வழங்குமாறு கோரியுள்ளார்.

இந் நிலையில் இன்று முற்பகல் சுமார் 10 மணியளவில் ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜரான முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் 10 மணி நேர நீண்ட வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அதன்படி வாக்கு மூலம் வழங்கிய பின்னர் அவர் இரவு 8 மணியளவில் ஆணைக் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.