மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் ;டக்ளஸ்

117712764 735731627207747 9048387590650820819 n
117712764 735731627207747 9048387590650820819 n

மேலதிகமாக பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மற்றும் ஒத்திவைக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் அனைவரையும் எதிர்வரும் செப்ரெம்பர்  15 ஆம் திகதிக்கு முன்னதாக மேன்முறையீட்டை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் வழங்கப்பட்ட பட்டதாரிகள் நியமனத்தின் போது பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினர் இன்று (22.08.2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ். அலுவலகத்தில் சந்தித்த போதே அமைச்சர் இக்கருத்தினை தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் குறித்த பட்டதாரிகள் நியமனத்திற்கு விண்ணப்பித்தர்களில் சுமார் 1500 இற்கும் மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விண்ணப்பதாரிகள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பினை மேற்கொண்டவர்கள் அல்லது ஏற்கனவே தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொண்டவர்கள் என்பதற்கு ஆதாரமாக சேமலாப நிதி கணக்கினை கொண்டிருப்பவர்கள் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாது தவிர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது, பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும், சேமலாப நிதிக் கணக்கினை வைத்திருந்தாலும் பட்டப்படிப்பிற்கு பொருத்தமற்ற தொழில்களில் தற்காலிகமாக ஈடுபட்டு வருகின்றவர்களுக்கும் நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். எனவும் குறிப்பிட்டார்.

118117300 704984273414050 8698265169699105341 n
118158727 364029298326717 660097063337654274 n
117945119 331922217994022 2597625016343280579 n