பிரபாகரனின் பெரியப்பா ஆக முயலும் விக்னேஸ்வரன் – ஆளும் கட்சி விசனம்

z p11 Wigneswaran 01
z p11 Wigneswaran 01

பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை. ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது.
குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு இனவாத கோணத்தில் கருத்துகளை வெளியிட்டுவருகிறார்.” என்றார்.

இலங்கையில் முதல் மொழி தமிழ் எனவும் இலங்கையின் ஆதிக்குடிகள் சைவத்தமிழர்கள் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்திவரும் விக்னேஸ்வரன் அவர்கள், இவ்விடயத்தை தனது நாடாளுமன்றக் கன்னி உரையிலும் வலியுறுத்தி இருந்தார். இந்த உரையால் தென்னிலங்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரித்துள்ளன.