இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் 3வருடத்திற்குள் நிறைவுபெறும்; டக்ளஸ்

dffdfddf 7
dffdfddf 7

கிளிநொச்சி மாவட்டத்தில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் 3 வருடங்களிற்குள் நிறைவுபடுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு கிளிநாச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முழுமை பெறாத அபிவிருத்தி திட்டங்களை எவ்வளவு காலப்பகுதிக்குள் நிறைவுபடுத்தி மக்களிடம் கையளிப்பீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்த நிலையம், பரந்தன் இரசாயன தொழிற்சாலை, உப்பளம் உள்ளிட்டவை முழுமை பெறாத நிலையில் இன்றும் காணப்படுகின்றது. குறித்த பகுதிகளை இந்த அரசாங்கம் எவ்வளவு காலத்திற்குள் மக்களிடம் கையளிக்க உள்ளது என ஊடகவியலாளர் இதன் போது வினவியதனால். அதற்கு பதில் அளித்த அமைச்சர் விரைவில் குறித்த பணிகளை முழுமையாக்குவோம்.

குறித்த வேலைத்திட்டங்களை 3 வருட காலப்பகுதிக்குள் முழுமையாக்கி மக்களிடம் கையளிப்போம். நாம் மக்களிடம் குறைந்தது 5 ஆசனங்களாவது தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 2 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தது. நாம் எதிர்பார்த்தது போன்று 5 ஆசனங்களிற்கு மேல் கிடைத்திருந்தால் இந்த விடயங்களை மிக விரைவாக செய்து முடித்திருப்போம் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.