கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட யாசகம் வாங்குபவர் தொடர்பில்!

616aab03886cdfee622e03434c4071ee XL 3
616aab03886cdfee622e03434c4071ee XL 3

கொழும்பு கொச்சிக்கடையில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட யாசகம் வாங்குபவர் மகரகமவின் பமுனுவாவில் வசிக்கும் கோடீஸ்வரர் என அடையாளம் காணப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது அந்த நபர் பழ வண்டியை திருடியதாக கூறப்படுகிறது.

விசாரணையில் 64 வயதான அந்த நபர் ஒரு மாடி வீட்டில் வசிக்கிறார், மேல் பகுதியை வாடகைக்கு கொடுத்துள்ளார்.அதிலிருந்து மாத வருமானம் ரூ. 30,000 வை பெறுகிறார். மற்றும் பிச்சை எடுப்பதன் மூலம் தினசரி ரூ .5000 வருமானத்தை பெற்றுக்கொள்கிறார்.

காவல்துறையினர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கார் மற்றும் மற்றொரு சொகுசு காரை கண்டுபிடித்தனர்.

கொச்சிக்கடையில் உள்ள ஜம்பெட்டா தெருவில் பழ வண்டியை திருடிய புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை கண்காணித்த பின்னர் பொலிசார் அவரை கைது செய்தனர்.

சி.சி.டி.வி காட்சிகள் பிச்சைக்காரன் வண்டியைத் திருடி அதை அந்த இடத்திலிருந்து தள்ளிவிடுவதைக் காட்டுகிறது, விசாரணையில் அவர் வண்டியை தனது இல்லத்திற்கு வழங்குவதற்காக மற்றொரு நபருக்கு ரூ .5000 செலுத்தியதாக தெரியவந்துள்ளது.