நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகியது

parliament sri lanka interior hemmathagama 0 1200x550 thegem blog timeline large
parliament sri lanka interior hemmathagama 0 1200x550 thegem blog timeline large

26 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தவிசாளராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதிச் சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ராமநாதன், சபை முதல்வர் மற்றும் அமைச்சர் தினேஸ் குணவர்தன, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அங்கத்துவத்தை பெறுவர்.

இவர்களுக்கு மேலதிகமாக சமல் ராஜபக்ஷ, நிமல் ஸ்ரீபால டி சில்வா, பேராசிரியர் ஜி. எல் பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, டலஸ் அலகப்பெரும, விமல் வீரவன்ச, மகிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரனதுங்க, மஹிந்த சமரசிங்க, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், அனுரகுமார திசாநாயக்க, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், ஆர். எம் ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கனேசன், எம்.ஏ.சுமந்திரன், அலி சப்ரி ரஹீம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.