ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு

418fda7a 7c4f279b c446b87e 16a82740 pcoi 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1
418fda7a 7c4f279b c446b87e 16a82740 pcoi 850 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான், சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ் காரியவசம், ஆசு மாரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர, திலும் அமுனுகம, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, மற்றும் A.H.M ஹலீம் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை நாளை(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசத்தினை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆசு மரசிங்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடம் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

அத்துடன், மங்கள சமரவீர மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடம் செப்டம்பர் 3ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.