மணிவண்ணனுக்கு ஆதரவான உறுப்பினர்களை பதவி விலகும்படி கடிதம்

தேசிய மக்கள் முன்னணி சீனா இரகசிய பேச்சு
தேசிய மக்கள் முன்னணி சீனா இரகசிய பேச்சு

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் மணிவண்ணன் ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையை கஜேந்திரகுமார் அணி ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக மணிவண்ணன் தரப்பிலுள்ள உள்ளூராட்சி நியமன பட்டியல் உறுப்பினர்களை பதவிவிலகும்படி கஜேந்திரகுமார் அணி கடிதம் அனுப்பியுள்ளது.

மணிவண்ணன் இந்தியாவின் றோ, புலிகளிற்கு மாத்தையா போல எமக்கு மணிவண்ணன் என முன்னணி விளக்கம் கூறி, மணிவண்ணனை முறையற்ற விதமாக பதவி நீக்க முயன்றது.

எனினும், தானே தொடர்ந்தும் தேசிய அமைப்பாளராக நீடிப்பேன் என அறிவித்து, தேசிய அமைப்பாளராக நீடித்து வருகிறார்.

இந்த நிலையில், முன்னணியிலுள்ள மணிவண்ணன் ஆதரவாளர்களை களையெடுக்கும் நடவடிக்கையை கஜேந்திரகுமார் அணி ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக, உள்ளூராட்சி நியமன பட்டியலில் நியமிக்கப்பட்டவர்களை பதவிவிலக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நியமன பட்டியல் உறுப்பினர்களில்- மணிவண்ணன் ஆதரவாளர்களை மட்டும் உடனடியாக பதவிவிலகும்படி முன்னணி தலைமை கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

யாழ் மாநகர சபையிலுள்ள இரண்டு பெண் உறுப்பினர்கள், சாவகச்சேரி நகர சபையிலுள்ள மூன்று உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களிற்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னணியின் நியமன பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டபோது, ஒரு வருடத்தில் மாற்றம் செய்வதென குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இரண்டு வருடங்களாக அதில் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது, மேற்கொள்ளப்படும் பதவி மாற்றம் மணிவண்ணன் ஆதரவாளர்களிடம் மட்டுமே நடக்கிறது