தேன் எடுக்க சென்றவர் சடலமாக மீட்பு.

IMG 25906d8ea1f28de9c0fdfd557443dd23 V
IMG 25906d8ea1f28de9c0fdfd557443dd23 V

வவுனியா மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளாத்திக்குளம் பகுதியில் காட்டிற்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த நபர் கடந்த இரண்டு நாட்களிற்கு முன்பாக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். எனினும் இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காட்டுப்பகுதியில் அவரைத்தேடியுள்ளனர்.


இதன்போது காட்டுப்பகுதியில்  பாரிய காயங்களுடன்சடலமாக இருக்கின்றமை நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக மடு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டு  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


குறித்த சம்பவத்தில் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த   சிறிரங்கன் வியேந்திரன் வயது 36 என்ற ஒரு பிள்ளையின் தந்தையே மரணமடைந்துள்ளார்.


இவர் தேன் எடுப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றநிலையில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.