ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்து அநுர கேள்வி

Untitled 1 4
Untitled 1 4

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு குறித்த யோசனை பிரதமரால் நேற்று சமர்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கையில் ஏன் உள்ளடக்கபடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.

அரசாங்க செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உறுதியளிக்கப்பட்டவாறு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக ஆயிரம் ரூபா வேதனம் வழக்கப்படுமா என கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நிதியமைச்சரிடம் கேள்வி ஒன்றை தொடுத்திருந்தேன்.

மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அந்த ஆயிரம் ரூபா வழங்கப்படுமென நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அது தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதா என மீண்டும் கேள்வி எழுப்பினேன்.

அதற்கு பதிலளித்த அப்போதைய பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெறுகின்றது என குறிப்பிட்டார்.

பதிலளிப்பதற்கு இடம்வழங்காது எழுந்து நின்ற நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ தானே இந்த விடயத்தை கூறுவதாகவும் நிச்சயமாக மார்ச் மாதம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த இடைக்கால கணக்கறிக்கையில் எங்கே அந்த கொடுப்பனவு உள்ளடக்கப்பட்டுள்ளதா என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.