போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதான 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்கள்: லக்னாத் வெலகேது!

unnamed 38
unnamed 38

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் சிறுவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர், வைத்திய நிபுணர் லக்னாத் வெலகேது தெரிவித்துள்ளார்.

கண்டி, பொல்கொல்ல தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்ற பட்டறையில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

கடந்த ஆறு மாதங்களில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்ட 52,000 பேரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே.

அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, கொரோனாவில் இருந்து நாட்டை காப்பாற்ற சுகாதார அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் நீண்ட காலமாக போதைப் பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை காப்பாற்ற முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.