ராஜபக்க்ஷர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு 38 சதவீத நிதி ஒதுக்கீடு: ஹர்ஷன ராஜகருணா!

625.500.560.350.160.300.053.800.900.160.90 37
625.500.560.350.160.300.053.800.900.160.90 37

இடைக்கால கணக்கறிக்கையில் ராஜபக்க்ஷர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு மாத்திரம் 38 சதவீத நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்தால் அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் கடந்தகால ஆட்சியின் போது உறுதியாகியிருந்தது.

இந்த நிலைமை மீண்டும் தோற்றம் பெறுமா? என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்க்ஷர்கள் குடும்ப ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதனை பலப்படுத்துவதற்காகவும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்க முயற்சித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.