நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள், மீண்டுமொரு யுத்தத்திற்கே வழிவகை செய்யும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும்,க.வி.விக்னேஸ்வரன் இந்து மற்றும் தமிழை உடுத்திக்கொண்டுள்ள மனிதன். பிரபாகரனின் கொள்கைகளை பின்பற்றும் அவ்வாறானவர்களின் செயற்பாடு பாதகமாகவே முடியும்.
நாடாளுமன்றத்தில் பிரிவினைவாதம் என்ற விசத்தைப் பரப்பி மீண்டும் தனிநாடு கோரிக்கையை வலுப்படுத்த அவர் முனைகிறார். அவர் மீண்டும் ஒரு யுத்தத்திற்கே வழியை ஏற்படுத்துகிறார்.
சிங்கள அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் பெறும் அவரிடம் இந்த பிழையை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்