மேலும் 322 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

srilankan airlines 77699
srilankan airlines 77699

மத்திய கிழக்கு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு தொழில்வாய்ப்புகளுக்காக சென்ற 322 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் எட்டு இலங்கையர்கள் அதிகாலை 1.30 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -226 என்ற விமானத்தில் மேலும் 272 இலங்கையர்கள் அதிகாலை 5.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை கட்டாரின் டோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் 42 இலங்கையர்கள் அதிகாலை 1.45 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.