இலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

hiv aids d generated picture concept 48080454
hiv aids d generated picture concept 48080454

இலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.

தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

இதன்படி, இலங்கையில் 19-25 வயதுடைய எச்.ஐ.வி உறுதியான ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் எச்.ஐ.வி நோயாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்து தேசிய எஸ்.டி.டி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் படிப்படியாக உயர்வு இருப்பதாக வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி மேற்கோளிட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு (2020) நிலவரப்படி இலங்கையில் 3600 எச்.ஐ.வி உறுதியான நோயாளிகள் இருப்பதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

எனினும், 2000 எச்.ஐ.வி நேர்மறை நோயாளிகள் மட்டுமே தேசிய எஸ்.டி.டி – எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மீதமுள்ள 1600 பேர் சிகிச்சை பெறாமல் சமூகத்தின் மத்தியில் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு வைரஸ் பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும் வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளார்.