சஹ்ரான் ஹாசிம் வெளிநாட்டில் இருப்பதாக தகவல்

ter 2
ter 2

பலமிக்க மேற்கத்தைய நாடு ஒன்றினது புலனாய்வு சேவை தகவல்படி 2019 பெப்ரவரி மாதத்தில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்று சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இராணுவப்புலனாய்வு பிரிவில் இருந்து பகிர்ந்துக்கொள்ளப்பட்ட தகவல் ஒன்றின்படி 2019 மார்ச் மாதத்தில் சஹ்ரான் இந்தியாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சஹ்ரான் தொடர்பாக இராணுவப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகள் அரச புலனாய்வுப்பிரிவினரின் விசாரணைகளுக்கு பாதகமாக அமையவில்லை என்று நிலந்த ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.

இதேவேளை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரச புலனாய்வு பிரிவினரின் தகவல்படி சஹ்ரான் இலங்கையிலேயே இருந்ததாக நிலந்த ஜெயவர்த்தன குறிப்பிட்டார்.

இதற்கிடையில் குறுக்கு விசாரணை ஒன்றின்போது ஆணைக்குழுவின் முன் கருத்துரைத்த இராணுவப்புலனாய்வு பிரிவின் சட்டத்தரணி மேஜர் பிரகீத், சஹ்ரான் தொடர்பான தகவல் பரிமாற்றத்தின்போது இராணுவத்தினருக்கும் அரச புலனாய்வு பிரிவினருக்கும் இடையில் பாரிய இடைவெளி இருந்தாக குறிப்பிட்டார்.