வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

20200830 105139 2
20200830 105139 2

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி ஆஸ்பத்திரி வீதியின் ஊடாக சென்று  மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?கொலைகாரன் நீதி வழங்க முடியாது. சர்வதேசமே! எம் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட எமது உறவுகளைத் தேடி பத்தாண்டுகளாக கண்ணீரோடு நாம். போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்.இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?என கோசங்கள் எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

காணாமலாக்கப்பட்டோரின் குறித்த போராட்டத்திற்கு ஆரவாக பொதுமக்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் பேரணியில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.