அம்பாறை சவளக்கடையில் 154 ஆவது பொலிஸ் வீரர் தினம் நினைவு கூரப்பட்டது!

img 13
img 13

நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படும் 154 வது பொலிஸ் வீரர்கள் தினத்தை முன்னிட்டு இன்று 03 அம்பாறை சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவின் கட்டளையின் பிரகாரம் கல்முனை பிராந்தியத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றதுடன் அன்னமலை பகுதியில் சிரமதானமும் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் சுற்றுச்சூழலில் உள்ள குப்பை கூழங்கள் என்பன அகற்றப்பட்டு சூழல் சுத்தப்படுத்தப்பட்டது .இதில்
பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொதுமக்கள் இளைஞர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிரமதானப் பணியை முன்னெடுத்தனர். குறிப்பாக சுற்றுச்சூழல் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக குறித்த சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.