வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

rainy day
rainy day

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில இடங்களிலும் நாளை (06) 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், சில வேளைகளில் நாடு முழுவதும் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடலோரப் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதன் காரணமாக மீன்பிடி மற்றும் கடற்றொழிலுக்கு செல்வோர் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.