மக்களுக்கு விடுக்கப்படும் அவசர எச்சரிக்கை!!

weather 720x380 1
weather 720x380 1

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற வானிலைக்காரணமாக, நாளை மதியம் வரை கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிக்குள், சிறியரக கப்பல்கள் மற்றும் படகுகளில் கடலுக்கு செல்வோர் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கபப்டுள்ளது.

அத்துடன், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமென எச்சரிக்கை விடுக்க்பப்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், காற்றின் வேகமானது அதிகரித்து வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்க்படப்டுள்ளது.

அத்துடன், நாட்டுக்கு ஊடாக காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மின்னல் தாக்கங்களில் இருந்தும் ஏனைய அனர்தங்களில் இருந்தும் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.