பொதியொன்றை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக வீச முயன்ற நபர் கைது!

3317b2940a002299975e48c3da332f4f
3317b2940a002299975e48c3da332f4f

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட கைப்பேசி மின்கலம் 10 (Battery), ஹெரோயின் 2 கிராம் 350 மில்லிகிராம் மற்றும் 36 ஆயிரம் ரூபா பணத்தை ஒன்றாக பொதி செய்து வெலிகட-மகஸின் சிறைச்சாலை மதிலுக்கு மேலாக வீச முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு குற்றப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.