இலங்கையின் இறைமைக்கு அமெரிக்கா ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது என்கிறார் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

d3b1a8f8 teplitz 850x460 acf cropped 2 850x460 acf cropped
d3b1a8f8 teplitz 850x460 acf cropped 2 850x460 acf cropped

அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் உதவி திட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அலைனா டெப்பிளிட்ஸ் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்காவின் உதவி திட்டங்கள் எவையும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டவையல்ல.

மேலும், பரஸ்பரம் இறைமையை மதித்து பாதுகாப்பதே வலுவான ஒத்துழைப்பு. துரதிஸ்டவசமாக எங்களின் பல திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகள் குறித்து சமீபகாலங்களில் பிழையான கருத்து காணப்படுகின்றது.

ஆனால், எங்களின் எந்த திட்டங்களும் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல. இலங்கைக்கான திட்டங்களை உருவாக்குவது நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த வெளிப்படை தன்மையுடன் செயற்படுகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.