சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர்நியமனம்……

23 1
23 1

சீனாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் தொடர்பான விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் இருந்திருக்கின்றார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 6வது குழுவான சட்டக்குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதுடன் முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் அவர் இதற்காக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.