உலகின் மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வு அளித்தது இலங்கையாம் – மகிந்த பெருமிதம்

108863335 822833ee 52fc 478a b26f dd24d45a47c9
108863335 822833ee 52fc 478a b26f dd24d45a47c9

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார்.

இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர். இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயிரம் தமிழீழ விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர்.

இன்று அரசியல் புலமை பற்றி நம் நாட்டில் மிகுந்த ஆர்வத்துடன் பேசுகிறார்கள். இருப்பினும், சந்திரசிரி கஜதீர நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து இந்நாட்டின் புலமைவாய்ந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அதுமாத்திரமின்றி அவர் பண்புமிகுந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று நான் கூற வேண்டும். அரசியலில் புலமைத்துவம் மிகவும் முக்கியமானது. கல்வியறிவும் மிக முக்கியமானது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார் .