கொரோனா காலத்தில் கடன் கட்டாதவர்களை கிரிப் முறைக்குள் உள்வாங்காதீர்கள்-திலீபன்

777777
777777

நிதி நிறுவனங்களில் கடன் பெற்று அதனை கொரோனா காலத்தில் செலுத்த முடியாது போனவர்களை வங்கி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் கிரிப் திட்டத்திற்குள் உள் வாங்காதீர்கள் என மத்திய வங்கி ஆளுனரிடம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனருடன் யாழ்ப்பாணத்தில் இன்று(07) இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே குறித்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தமது தொழில் துறையை மீள கட்டியெழுப்ப வசதியாக அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் ஊடாக 25 மில்லியன் வரையில் 4 வீத வட்டிக்கு கடன் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனவே வட மாகாணத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இவ் விடயத்தில் கவனம் செலுத்தி இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்துடன் நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களின் நிலைமைகள் தொடர்பாகவும் மத்திய வங்கி ஆளுனரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கடன் பெற்றவர்கள் மீது நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சமூகத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் தொடர்பில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டது என தெரிவித்துள்ளார்.