20ஆவது திருத்தச் சட்டம் குறித்து மாவை சேனாதிராஜா

unnamed 1 2
unnamed 1 2

20ஆவது திருத்தச் சட்டம் குறித்து மாவை சேனாதிராஜா

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூல பத்திரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் வர்த்தமானியில் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

மேலும் 20ஆவது திருத்தச் சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற நிலையில் திருத்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.எனினும் 20ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தங்கள் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்துள்ளார்