வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 157 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு!

IMG e84aa1be05a0adbb40a19f74574ad314 V
IMG e84aa1be05a0adbb40a19f74574ad314 V

கொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த 157 இலங்கையர்கள் விஷேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு வவுனியா பம்பைமடுவிலுள்ள இராணுவ‌ தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 157 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு கொரோனா தொற்றில்லையென உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இவர்கள் “பக்ரைன்” நாட்டிலிருந்து வருகை வந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அவர்களது சொந்த இடங்களான கொழும்பு, காலி, குருநாகல், மாத்தறை  அனுராதபுரம் போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.