உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

vlcsnap 2015 08 20 18h59m29s223 1
vlcsnap 2015 08 20 18h59m29s223 1

எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விடயங்களை விசாரணை செய்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இந்த ஆணைக்குழு கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

இதன் கால எல்லை மார்ச் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் செப்ரெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரையில் ஆணைக்குழுவின் கால எல்லை 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.

இறுதி அறிக்கையை தயாரிப்பதற்காக மேலும் கால எல்லையை வழங்கும் பொருட்டு கால எல்லை டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி விரையில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.