பொய் கூறி அனுதாபம் தேட முற்படும் பிரேமலால் – தலதா அத்துகோரல!

Thalatha Athukorala
Thalatha Athukorala

பொய்யான கதைகளைக்கூறி, அனுதாபத்தைத் தேடிக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர முற்படுகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, நேற்றைய அமர்வின்போது என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

2001ஆம் ஆண்டு அவரது உறவினர் ஒருவரின் உயிரிழப்புக்கும் நான் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும். இது உண்மையெனில் அவர்களின் ஆட்சிக்காலத்தில் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம்.

அதனை செய்யாது, 20 வருடங்கள் கழித்து இன்று அனுதாபத்தைத் தேடவே இவ்வாறான கதைகளை கூறுகிறார். 2017ஆம் ஆண்டு தான் நான் நீதியமைச்சராக நியமிக்கப்பட்டேன்.

இதற்கு முன்னர் நான் எந்தக்காரணம் கொண்டும் அவரின் இந்தச் சம்பவம் தொடர்பாக அறிந்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், என்மீது தேவையில்லாமல் அவர் பொய்க்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவருக்கு ஏன் இந்த மரண தண்டனை கிடைத்தது என்பதை சபாநாயகர் தேடிப்பார்த்தால், அதன் தார்ப்பரியம் விளங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.