அனைத்து வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் திட்டம் -துமிந்த திசாநாயக்க

thum
thum

இலங்கையில் அனைத்து வீடுகளுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சோலார் பேனல்கள் ஊடாக சூரிய ஒளியைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கு மின்சாரம் தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க கட்டடங்கள், அரச அமைச்சகங்கள் போன்ற நிறுவனங்கள் சூரிய சக்தியால் இயங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.