பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர்!

IMG 20200911 122049
IMG 20200911 122049

பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அவற்றோடு குற்ற செயற்பாடுகள் தொடர்பில் இரகசியம் பேணப்படும் என வன்னி பிரதிப்பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

வன்னி பிரதிபொலிஸ்மா அதிபரால் இன்று(11) வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்திலே இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் துண்டு பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தகவல்கள், சட்டவிரோதமான மதுபானம்,போதை வஸ்து தொடர்பான தகவல்கள், தேசிய பாதுகாப்பிற்கு பாதகம் விளைவிக்கக் கூடிய செயற்பாடுகள் ,வன அழிப்பு, மண் அகழ்வு, வனவிலங்கு அழிப்பு, தேசிய மரபுரிமைக்கு சொந்தமான உடமைகள் அழித்தல் மற்றும் விபத்துக்கள், பொலிஸ் சேவை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள சட்டவிரோத பொருட்கள்,ஆட்கடத்தல் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை 076 622 4949 ,076 622 6363 இலக்கத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளும்போது இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்த முடியும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.