பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டவர் போதைப்பொருட்களுடன் கைது

5555555555
5555555555

பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தபாற்காரர் ஒருவர் 3 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பத்தரமுல்லை – படபொத்த பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தலங்கம பொலிஸார் நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சந்தேக நபரிடமிருந்து 4 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 5 போதை மாத்திரைகள் மற்றும் 43,000 ரூபா பணம் ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது .

மேலும், கடந்த தேர்தலின் போது வாக்கு எண்ணும் நடவடிக்கையில் முறைகேடாக நடந்து கொண்ட காரணத்திற்காக வேலை நிறுத்தம் செய்யப்பட்ட குறித்த தபாற்காரர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தலங்கம காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

33 வயதான குறித்த சந்தேக நபர் சேவையிலுள்ள போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஏற்கனவே ஒரு தடவை கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்ற்கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .