புது திட்டத்தை அறிமுகப்படுத்தினார் நாமல் ராஜபக்ஸ

888888 1
888888 1

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தும் நோக்கில், நடைபயிற்சியின் போதே கூட்டங்களை நடத்துவதற்கான புதிய திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஸ இன்று அறிமுகப்படுத்தியுள்ளார் .

“வோல்க் டால்க் ” என அழைக்கப்படும் நடந்தபடி விவாதிக்கும் திட்டத்தை இன்று நாமல் அறிமுகப்படுத்தியுள்ளார் .

இதன்படி, சமுர்த்தி வீட்டு பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வணிகங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹன் செமசிங்கவுடன் இன்று முதல் சந்திப்பை நடத்தியுள்ளார் .

தொழில் முனைவோர் மற்றும் தொழிலை ஆரம்பிப்பவர்களிற்காக இரண்டு அமைச்சுக்களும் இணைந்து பணியாற்றக் கூடிய வழிமுறைகள் குறித்து விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .