குறைகேள் சந்திப்பொன்றை நடத்தினார் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா

d987f91d 71e1 4661 b3af 31a40389ee12
d987f91d 71e1 4661 b3af 31a40389ee12

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் கிரான் மீனவர் சங்க பிரதிநிதிகளோடு குறைகேள் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

இன்று கிரான் கிராமத்திலுள்ள தனியார் காணியொன்றில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா தலைமையில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்த போது,

வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக , அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெற்றுள்ள ஒரேயொரு தமிழ் அமைச்சர் என்ற வகையில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது வாழ்துக்களை தெரிவிப்பதாகவும், தம்மை நேரில் சந்தித்து, தமது பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பாடுபடும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை பலப்படுடுத்தப்போவதாகவும் குறிப்பிட்டனர்.

7958afcf 808b 43dd 957c 66ce223b75fe
7958afcf 808b 43dd 957c 66ce223b75fe

அவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சுருக்கு வலை பாவனையை முற்றாக தடுத்துநிறுத்துமாறும், ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்களை பெற்றுக்கொள்ள உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

அத்தோடு, வேலைவாய்ப்பற்ற தமது கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்புக்கள் வழங்கப்படவேண்டுமென்றும், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு இறுதியாக மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா உரையாற்றியபோது, மீன்பிடி அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மாவட்டத்திற்கு விரைவில் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதால், அவரோடு ஒரு நேரடி சந்திப்புக்கு ஏற்பாடுசெய்து குறித்த பிரச்சினைகளை தீர்க்க உதவுவதாக அவர் தெரிவித்தார்.

இச் சந்திப்பில், மீனவர் சங்க பிரதிநிதிகள், இளைஞர்கள், பொது மக்கள் மற்றும் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

656569f7 a6bd 49ed bf66 8a12b88d649c
656569f7 a6bd 49ed bf66 8a12b88d649c