இளைஞர்களின் கனவை நனவாக்கும் – ஜனாதிபதி

625.500.560.350.160.300.053.800
625.500.560.350.160.300.053.800

நாட்டிலுள்ள இளைஞர்களின் சொந்த வீடு வாங்கும் கனவை நனவாக்கும் நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடுத்தர வர்க்க வீட்டுத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது .

இதன் ஊடாக 5000 வீடுகள் நடுத்தர வர்க்க மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதல் முறையாக 6.25% வருடாந்த நிவாரண வட்டிக்கு வழங்கப்படும் இந்த வீட்டிற்காக 30 வருட கட்டணம் செலுத்தும் காலம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் குறைந்த பட்ச பணம் செலுத்தி இந்த வீடு ஒன்றை கொள்வனவு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பேலியகொட, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் இந்த வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஸவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.