மேலும் 9 பேர் குணமடைவு

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920 1
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920 1

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 09 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில், 3 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 5 பேர் குணமடைந்துள்ள நிலையில், மேலும் 217 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.