காணி விடயங்களில் காலதாமதம் வேண்டாம். வினோ எம்பி

IMG 0873 1
IMG 0873 1

காணி தொடர்பான விடயங்களில் காலதாமத்தினை ஏற்படுத்தாத வகையில் பிரதேச செயலகங்கள் செயற்படவேண்டும். என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்

வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

காணி தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவ்வாறான காணிகளிற்கு இயலுமானவரையில் அனுமதி பத்திரங்களை வழங்கி காலதாமத்தினை ஏற்படுத்தாத வகையில் பிரதேச செயலகங்கள் செயற்பட வேண்டும்.

சில பிரச்சனைகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அல்லது திணைக்களங்களின் தலைவர்கள், உயர்அதிகாரிகளால் தீர்க்க முடியவில்லை எனவே அதனை தீர்த்து தாருங்கள் என்று கூறி பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், அரசியல் வாதிகளிடமும் வருகின்றனர்.

இவ்வாறான பல பிரச்சனைகளை திணைக்கள மட்டத்திலேயே தீர்த்து வைக்க முடியும். எனவே அவற்றை இயலுமான வரையில் தீர்த்துவையுங்கள் .நாங்கள் அந்த விடயங்களில் தலையிடுவது பொருத்தமற்ற விடயமாகவே இருக்கும். அப்படியான விடயங்கள் எங்களிடம் வரும்போது வீணான பிரச்சனைகளை உருவாக்கும் என்று எமக்கு நன்கு தெரியும்.

அத்துடன் அந்த பிரச்சனையை தீர்க்கமுடியாது விடில் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை உயர் அதிகாரிகள் சொல்லவேண்டும் என்றார்.