யாழ்ப்பாணத்தில் பிளாஸ்ரிக் அற்ற சுற்றாடலை நோக்கிய செயற்றிட்டம் ஆரம்பம்

IMG 9564
IMG 9564

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராசயனவியல் சமூகத்தினால் “பிளாஸ்ரிக் அற்ற சுற்றாடலை நோக்கி” என்ற செயற்றிட்டம் இன்று(15) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொக்கோ – கோலா நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தச் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு யாழ். பல்கலைக்கழக இராசயனவியல் துறையின் தலைவர் கலாநிதி பி.ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன் மற்றும் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், ஊழியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் செயற்றிட்டத்தின் கீழ், பல்கலைக்கழகச் சுற்றாடலில் சேரும் பிளாஸ்ரிக் பொருள்களைச் சேகரிப்பதற்கான கொள்கலன்கள் ஆங்காங்கே நிறுவப்படவுள்ளதுடன், அவற்றில் சேரும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களைக் கிரமமாக அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.