தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நாலக டி சில்வாவின் அடிப்படை உரிமை மனு!

டி சில்வா
டி சில்வா

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவொன்று உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்து தடுத்து வைப்பது சட்டத்திற்கு விரோதமானது என தெரிவிக்குமாறு கோரி அவர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் இன்று 15 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, இரு தரப்பின் இணக்கப்பாட்டிற்கு அமைய மனுதாரர் தரப்பினரால் அடிப்படை உரிமை மனு மீளப்பெறப்பட்டுள்ள நிலையில், அதனை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.