உலகின் கப்பல் கேந்திரமாக நாட்டை மாற்ற திட்டம்!

Progress of first 100 days 1140x639 1
Progress of first 100 days 1140x639 1

உலகின் பிரதான கப்பல் கேந்திரநிலையமாக நாட்டினை அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், 24 ஆயிரம் கொள்கலன்களைக் கையாளும் திறன்கொண்ட துறைமுகமாக நாட்டின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை அண்மித்து பயணிக்கும் சர்வதேச கப்பல்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் வகையில், கொழும்பு, காலி, திருகோணமலை, காங்கேசன்துறை மற்றும் ஒலுவில் ஆகிய துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.