வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை !

tr6ftg
tr6ftg

எதிர்வரும் காலங்களில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான ராஜதந்திர உன்படிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆகவே, இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்பிவைப்பதாக முகவர்கள் தெரிவிக்கும் போலிப் பிரச்சாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.