யாழ் நீதவான் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார் எம்.கே.சிவாஜிலிங்கம்!

a3ee73e5 fe55 441d 8fbd bd8ed0d962e7 1
a3ee73e5 fe55 441d 8fbd bd8ed0d962e7 1

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே சிவாஜிலிங்கம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அழைத்துவரப்பட்டு உள்ளார்.

a3ee73e5 fe55 441d 8fbd bd8ed0d962e7
a3ee73e5 fe55 441d 8fbd bd8ed0d962e7

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் நேற்று பல தடைகளையும் தாண்டி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் நினைவுகூரப்பட்டது.

74be1bc9 9098 4047 b8b9 d78c7caf1821
74be1bc9 9098 4047 b8b9 d78c7caf1821

தியாகதீபம் திலீபனின் நினைவுதினத்தில் நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவுகள் பொலிஸார் நீதிமன்றத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம்,யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

d8be7e09 43a0 4e67 aa3e 33069e0a7dbc

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார்.இதானல் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.