வடக்கில் மஞ்சள் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

222 2
222 2

வடக்கில் மஞ்சளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை நாம் பயிர் செய்வதற்கு ஏற்ப விதை இனங்களை பெற்று தருமாறு விவசாய அமைச்சரிடம் யாழ்.மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்ற போதே அவர்கள் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது .

அதிலும் குறிப்பாக மஞ்சளுக்கு அதிக தட்டுப்பாடும் கடும் விலை அதிகரிப்பும் காணப்படுகின்றது எனவே இந்த மஞ்சளை வடக்கில் நாம் பயிரிடுவதற்கு விதை இனங்களையும் இதர வசதிகளையும் அதற்கான செயல்முறைகளையும் தந்து உதவுமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதேவேளை இதனை தாம் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .